சந்திரயான்-3 வெற்றி - உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்தியா... நடிகர் ரஜினிகாந்த்
இஸ்ரோவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
முதன்முறையாக, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசம் தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை குத்தியுள்ளது.நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இஸ்ரோவுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார்.