மாணவர்களிடம் கலந்துரையாடிய சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானி

கல்லிடைக்குறிச்சியில் தான் பயின்ற பள்ளிக்கூடத்தில் சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

Update: 2023-09-21 20:54 GMT

அம்பை:

நிலவின் தென்துருவத்தில் முதன் முதலில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கி சாதனை படைத்தது. சந்திரயான்-3 திட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் தலைவராக நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பெருமாள்கோவில் மேலமாட வீதியைச் சேர்ந்த விஞ்ஞானி முரளி கிருஷ்ணா பணியாற்றினார். இவர் தனது சொந்த ஊரான கல்லிடைக்குறிச்சிக்கு வந்தார். அங்கு அவர் பயின்ற லட்சுமிபதி நடுநிலைப்பள்ளிக்கு சென்று, மாணவர்கள், ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.

சந்திரயான்-3 திட்டத்தின் சிறப்புகள் குறித்தும் விளக்கி கூறிய அவர், மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்று கூறி ஊக்கப்படுத்தினார். ராக்கெட் மாதிரியையும், புத்தகங்களையும் பள்ளிக்கூடத்துக்கு வழங்கினார். பள்ளிக்கூடத்தின் சார்பில் விஞ்ஞானி முரளிகிருஷ்ணாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்