இரும்பாலை கருக்கல்வாடி பெரிய கருமாரியம்மன் கோவிலில் சண்டியாகம்

சேலம் இரும்பாலை கருக்கல்வாடியில் உள்ள பெரிய கருமாரியம்மன் கோவிலில் சண்டியாகம் நடைபெற்றது.

Update: 2022-07-28 22:22 GMT

சண்டியாகம்

சேலம் இரும்பாலை கருக்கல்வாடி கிராமத்தில், பெரிய கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக பெரிய கருமாரியம்மன் அருள்பாலித்து வருகிறார். மேலும் ஆதி விநாயகர், ஸ்ரீ தேவி-பூதேவி சமேத கரிய பெருமாள், கற்பக வள்ளி சமேத கார்கீஸ்வரர், செல்லாண்டி அம்மன் சன்னதிகளும் உள்ளன.

இந்த கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி, மகா சண்டியாகம் ேநற்று நடைபெற்றது. கிராம நலன் வேண்டியும், விவசாயம் செழித்து தொழில்கள் சிறக்க வேண்டியும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், அனைவரின் இல்லத்திலும் லட்சுமி அருள்பாலிக்க வேண்டியும் இந்த யாகம் நடைபெற்றது.

இந்த யாகத்தின் தொடக்கமாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்ணியாக மாத்ருகா பூஜை, மகா சண்டி ஆவாகனம், சப்த சதீ பாராயணம், யோகினி பைரவர் பலிதானம் போன்ற வழிபாடுகள் நடைபெற்றன. இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதன்தொடர்ச்சியாக நேற்று காலை 7.35 மணிக்கு ஹோம திரவியங்கள் ஆலய பிரதட்சிணம், விநாயகர் பூஜை, புண்யாகம், சண்டி ஆவாகனம், 13 அத்தியாய ேஹாமம், சுவாசினி, கன்யா, வடுகபூஜை போன்ற வழிபாடுகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பெரிய கருமாரியம்மன் சண்டி கலசாபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மங்கள வாத்தியம் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சண்டியாக பூஜைக்கான ஏற்பாடுகளை, ஊர் தர்மகர்த்தா, அனைத்து ஊர்க்கவுண்டர்கள், காணியாசிக்காரர்கள், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்