சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா

அதிராம்பட்டினத்தில் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா

Update: 2023-06-04 18:45 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கரையூர் தெருவில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக விழா நடந்தது.

விழாவையொட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று உள்ளூர் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்தனர். காவடி பால்குடங்களை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மன்னப்பன் நாயக்கன் குளத்திலிருந்து எடுத்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற வேண்டி பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண் பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கரையூர் கிராம தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்