தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நள்ளிரவு வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது

Update: 2023-10-28 16:56 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நள்ளிரவு 12.15 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் நள்ளிரவு 12.15 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்