தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

Update: 2023-12-16 14:34 GMT

சென்னை,

தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி , செங்கல்பட்டு , ராணிப்பேட்டை , வேலூர் , திருப்பத்தூர் , திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கரூர், சேலம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி , விருதுநகர், தூத்துக்குடி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்