தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-01 15:26 GMT

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கரூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, வேலூர், கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்