சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Update: 2022-10-07 01:48 GMT

சென்னை,

தமிழகத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் பலத்த மழை பெய்தது. நுங்கபாக்கம், கோடம்பாக்கம் தேனாம்பேட்டை வள்ளுவர்கோட்டம், தியாகராய நகர், மெரினாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதேபோல புறநகர் பகுதியான அம்பத்தூர், பாடி மண்ணூர்பேட்டை, கொரட்டூர், முகப்பேர், ஆவடி,கோவில் பதாகை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை கடந்த மாதம் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், பருவமழை காலத்தில் வழக்கத்தை விட106 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்