சென்னை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-09-21 03:02 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, சென்னையின் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் வேளச்சேரி, வேப்பேரி, தாம்பரம், போரூர், அடையாறு, துரைப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்