திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பெருந்திட்ட வளாகப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் பெருந்திட்ட வளாகப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-07 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.300 கோடி செலவில் பக்தர்கள் வசதிக்காக பெருந்திட்ட வளாக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் கோவில் மகா கும்பாபிஷேக விழா பணிகளும் இத்திட்டத்துடன் ஒருங்கிணைந்து நடைபெற்று வருகிறது. கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகள், அன்னதான கூடம், கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் உள்ளிட்ட இடங்களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில், "பக்தர்கள் தங்குமிடங்களில் நடைபாதை கடைகளுக்கு அனுமதியில்லை. கோவில் வளாகத்தில் இடும்பன் கோவில் கந்த வேல் சஷ்டி மண்டபம் அருகே இருந்த கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதனால் கடைகள் இருந்த இடத்தில் தற்போது பக்தர்கள் தங்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் யாரும் கடைகள் அமைக்க கூடாது என்றார். மேலும் அங்கிருந்த நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின் போது இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் செந்தில்முருகன், கோவில் செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் அழகர்சாமி, இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்