போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் செயின் திருட்டு

ஆம்பூரில் போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் செயின் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-20 17:57 GMT

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சுமதி (வயது 55). இவர் நேற்று ஆம்பூர் இந்திரா நகர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் தாங்கள் போலீஸ் எனக்கூறி சுமதியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் தாங்கள் அணிந்திருக்கும் செயினை கழற்றி பையில் வைத்துக் கொண்டு ஜாக்கிரதையாக செல்லுங்கள் அவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி சுமதி தான் அணிந்திருந்த செயினை கழற்றி பைக்குள் வைத்துள்ளார். அப்போது அவரது கவனத்தை திசைதிருப்பி, அவருக்கு தெரியாமல் செயினை எடுத்து சென்றுள்ளனர்.

சுமதி சிறிது தூரம் சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த 5 பவுன் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்