பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
கும்பகோணத்தில் பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;
கும்பகோணத்தில் பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
9 பவுன் சங்கிலி பறிப்பு
கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் அண்ணா நகரைச்சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 45). நேற்றுமுன்தினம் இவர் சாரங்கபாணி கீழ வீதியில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் பின்னால் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் பின்தொடர்ந்தனர். மோட்டார் சைக்கிள் சாரங்கபாணி கீழவீதி பெரிய தெரு சந்திப்பு பகுதியில் வந்தபோது, விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.