நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சையில், நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;
தஞ்சாவூர்:-
தஞ்சையில், நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மனைவி மங்களநாயகி(வயது 51). இவர் நேற்று முன்தினம் இரவு தஞ்சையில் உள்ள ஒரு பல் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக தஞ்சை வந்தார்.
தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் இறங்கி வ.உ.சி. நகரில் நடந்து சென்ற கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தனர். அவர்கள் மங்களநாயகி அருகில் வந்தபோது திடீரென அவர் கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை பறித்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இதனால் திடுக்கிட்ட மங்களநாயகி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அருடைய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் இருவரும் 10 பவுன் சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டனர்.
இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் மங்களநாயகி புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறாரகள்.