பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

வள்ளியூர் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2022-06-02 15:56 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே உள்ள வடக்கு ஆச்சியூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முப்புடாதி (வயது 40). விவசாயி. இவரது மனைவி பிரேமா (35). இவர்கள் ஆனைகுளத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கொடை விழாவை பார்ப்பதற்காக உறவினர் மலையாண்டி என்பவர் வீட்டிற்கு சென்றனர். அங்கு கொடை விழாவை பார்த்துவிட்டு இரவில் அனைவரும் வீட்டில் கதவை திறந்து வைத்தபடி தூங்கினர். அப்போது அங்கு வந்த மர்மநபர், பிரேமா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து பிரேமா வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்