சிறப்பாக பணியாற்றிய ரேஷன் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய ரேஷன் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-05-05 18:15 GMT

சிறப்பாக பணியாற்றிய ரேஷன் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

பொது வினியோக திட்டம் செயல்படுத்துவதில் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பொது வினியோகதிட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு சிறந்த பணியினை பாராட்டி பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் தேர்வு குழுவினரால் சிறந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மெட்டுகுளம் ரேஷன் கடை விற்பனையாளர் சுபாஷ், விரிஞ்சிபுரம் கடை விற்பனையாளர் சரவணன், நெல்லூர்பேட்டை கடை எடையாளர் தணிகைமலை, சத்துவாச்சாரி கடை எடையாளர் மணிகண்டன் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களும், ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை பரிசுத்தொகையும் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, பொதுவினியோக திட்ட துணை பதிவாளர் (பொறுப்பு) அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்