விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் வளர்மதி சான்றிதழ் வழங்கினார்.

Update: 2023-05-22 13:06 GMT

குறை தீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, வீடுகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 251 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சான்றிதழ்

மேலும், ராணிப்பேட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கொண்டு வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற 72 மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,000 மதிப்பிலும், இரண்டாம் பரிசாக ரூ.1,500 மதிப்பிலும், மூன்றாம் பரிசாக ரூ.1,000 மதிபிலும் மதிய உணவு கொண்டு செல்லும் உபகரணங்கள், அகராதி, திருக்குறள் புத்தகம், கடிகாரம், செஸ் போர்டு, ஓவியப் பயிற்சி உபகரணத் தொகுப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, துணை கலெக்டர் வள்ளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்