நெமிலியில் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்

நெமிலியில் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2023-05-20 18:33 GMT

நெமிலியில் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தாசில்தார் பாலசந்தர் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் நெமிலி, பனப்பாக்கம், ஒச்சேரி, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு முடித்த 118 மாணவ-மாணவிகளுக்கு சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் டோமேசன், மணிகண்டன், பாண்டியன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்