குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு சான்றிதழ்

குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2022-06-25 15:03 GMT

கொரடாச்சேரி:

திருவாரூரில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை நகராட்சி தலைவர் வழங்கினார்.

உறுதிமொழி

திருவாரூர் நகராட்சி பகுதியில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் என் குப்பை எனது பொறுப்பு என்ற அடிப்படையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் புவனபிரியா செந்தில் தலைமையிலும், கமிஷனர் பிரபாகரன், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை பச்சை நிற கூடையிலும், மக்காத குப்பைகளை நீலநிற கூடையிலும், தீங்கு விளைவிக்கும் குப்பைகளை தனியாகவும் தரம் பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

சான்றிதழ்

திருவாரூரில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழை தலைவர் புவனபிரியா செந்தில், கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர். தொடர்ந்து நகராட்சியின் நெய்விளக்கு தோப்பு குப்பை கிடங்கில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் நகராட்சி கவுன்சிலர்கள் அசோகன், கலியபெருமாள், மலர்விழி கலியபெருமாள், அய்யனார், ஷகிலா பானு, பெனாசீர் ஜாஸ்மின், நகராட்சியின் மேலாளர் முத்துக்குமார், நகர அமைப்பு ஆய்வாளர் கணேசரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்