பயிற்சி முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ்

பயிற்சி முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2022-09-18 13:52 GMT

வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு வட்டாரங்களைச் சேர்ந்த 35 அங்கன்வாடி பணியாளர்களுக்கு துறை சார்ந்த பணி பயிற்சி குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒரு மாதம் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட மாவட்ட அலுவலர் வி.கோமதி தலைமை தாங்கினார். கே.வி‌குப்பம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மைதிலி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கலந்துகொண்டு பயிற்சி முடித்த 35 பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பயிற்சி காலத்தில் சிறப்பாக பயிற்சி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் முத்துக்குமார், மாவட்ட திட்ட உதவியாளர் சவிதா, வட்டார ஒருங்கிணைப்பாளர் இந்திரகுமாரி, ஊராட்சி மன்ற தலைவர் பாபு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத்தம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரீஹானா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்