வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்-பரிசு
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்-பரிசு
திருவாரூர் கல்வி மாவட்ட அளவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கான ஜெனீவா ஒப்பந்த தினம் பற்றிய பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டி திருவாரூர் வ.சோ. அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) தியாகராஜன் தலைமை தாங்கினார். ரெட்கிராஸ் மாநில பொருளாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். இதில் பள்ளி செயலர் ரவிசங்கர், இணை கன்வீனர் வென்சி கிளாடியா மேரி, ஒன்றிய கன்வீனர் அய்யப்பன் மற்றும் ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.