கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு:வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்

Update: 2023-06-06 05:45 GMT

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம், சப்தகிரி கல்வி நிறுவனங்கள், இந்தியன் வங்கி மற்றும் மைனா ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆகியவை சார்பில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த முகாமில் 65-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. இந்த விழாவுக்கு தர்மபுரி சப்தகிரி கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரும், மாவட்ட கைப்பந்து கழக தலைவருமான எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி பயிற்சி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சீருடைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். வாழ்நாள் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். விழாவில் சேர்மன் பூக்கடை ரவி, பொருளாளர் மேச்சேரி அன்பழகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, சங்க நிர்வாகிகள் சம்பங்கி ராமு, ஜெகநாதன், மணிவண்ணன், ஜெயபால், முத்துக்குமார், தனபால், மாது, வணங்காமுடி, சுந்தர்ராஜன், சூரிய நாராயணன், பயிற்சியாளர்கள் தினேஷ்குமார், நிர்மல் குமார், மோகன், பிரபு, ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்