5 அதிகாரிகளுக்கு வெள்ளி பதக்கம், சான்றிதழ்

கொடிநாள் வசூலில் சாதனை படைத்த மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-11-07 18:45 GMT

கொடிநாள் வசூலில் சாதனை படைத்த மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 330 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெள்ளி பதக்கம்

மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், 2019-ம் ஆண்டு கொடிநாளில் ரூ.3 லட்சத்திற்கு மேல் வசூல் புரிந்த மாவட்டவருவாய் அலுவலர், தேவகோட்டை கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர், பத்திரப்பதிவு துறை அலுவலர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உள்ளிட்ட 5 மாவட்ட அலுவலர்களுக்கு தலைமை செயலாளரின் பாராட்டு சான்று, வௌ்ளி பதக்கம் மற்றும் வனத்துறையின் சார்பில், வன உயிரின வார விழா 2022-ஐ முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி-வினா ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற 34 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்