இயற்கையை காப்போம் திட்டத்தில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா

இயற்கையை காப்போம் திட்டத்தில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2022-06-07 19:27 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூரில் வெங்கடேசபுரத்தில் இயங்கி வரும் நாலுமாவடி, புதுவாழ்வு சங்கம், இயேசு விடுவிக்கிறார் கெத்செமனே ஜெபமையம் சார்பில் இயற்கையை காப்போம் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், காடுகளை பெருக்கிட மரம் வளர்ப்பை ஊக்குவிக்கவும் விவசாயிகள், பொதுமக்களுக்கு 15 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் இயக்கத்தின் தொடக்க விழா பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் தலைமை தாங்கினார். ரோவர் கல்விக்குழுமத்தின் மேலாண் துணைத் தலைவர் ஜான்அசோக்வரதராஜன் முன்னிலை வகித்தார்.

கெத்செமனே ஜெபமையத்தின் பொறுப்பாளர் பிலிப் சரவணன் அனைவரையும் வரவேற்று, இயற்கையை காப்போம் திட்டம் குறித்து அறிமுக உரையாற்றினார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் திருச்சபையின் நிறுவனர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்கள், விவசாயிகளுக்கு நிழல்தரும், கனிதரும் மரக்கன்றுகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்