அங்கன்வாடிக்கு நாற்காலிகள் வழங்கும் விழா

மானூரில் அங்கன்வாடி மையத்துக்கு நாற்காலிகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2022-12-28 21:22 GMT

பேட்டை:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மானூர் யூனியன் அலுவலகத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். யூனியன் தலைவி ஸ்ரீலேகா அன்பழகன் தலைமை தாங்கி, மானூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜபிரியாவிடம், கிருஷ்ணா மைன்ஸ் வழங்கிய 500 குழந்தைகள் அமரும் பிளாஸ்டிக் நாற்காலிகளை வழங்கினார். இந்த நாற்காலிகள் 18 அங்கன்வாடிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்