கிறிஸ்தவ ஆலயத்தில் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் விழா நடைபெற்றது.

Update: 2022-10-10 19:34 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ. பரிசுத்த பவுல் ஆலயத்தில் விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை பேராயர் ஜெய்சிங்பிரின்ஸ் பிரபாகரன் தலைமை தாங்கினார். சபை ஆயர் அருள்தனராஜ் முன்னிலை வகித்தார். ஸ்தோத்திர பண்டிகை ஆராதனையில் பேராயர் தேவ செய்தி அளித்தார். நண்பகல் 34-வது அசனப்பண்டிகை விழா நடைபெற்றது. முடிவில் பேராயர் ஜெய்சிங் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பேராய அளவில் நடைபெற்ற பாடல் போட்டியில் முதல் பரிசு பெற்ற அத்திகுளம் சி.எஸ்.ஐ. பரிசுத்த பவுல் பாடகர் குழுவினருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. இதில் சபை மக்கள் மற்றும் உற்றார், உறவினர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்