அரசு பள்ளியில் விழா

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார துறை சார்பில் விழா நடந்தது

Update: 2022-10-23 18:45 GMT

செங்கோட்டை:

உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழா செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார துறை சார்பில் துணை இயக்குனர் முரளி சங்கர் அறிவுரையின் பேரில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் முன் கழுத்து கழலை நோய், தைராய்டு குறைபாடுகள், உடல் வளர்ச்சி குறைபாடுகள் பற்றி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ராஜகோபால் பேசினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் உறுதிமொழி வாசித்தார். நிகழ்ச்சியில் பள்ளி துணை தலைமை ஆசிரியர் சமுத்திரகனி மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்