பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி துணை மின் நிலையத்தில் புதிய கூடுதல் மின்மாற்றி தொடக்க விழா நடந்தது. இதற்கு மின் வாரிய செயற்பொறியாளர் ரவி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் பிரதீப், மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவிந்தசாமி எம்.எல்.ஏ. புதிய கூடுதல் மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பொ.மல்லாபுரம் நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் பெரியகண்ணு, வஜ்ஜிரவேல், டோமினிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.