பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஏ. செக்காரப்பட்டி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-05-19 18:55 GMT

தர்மபுரி அருகே அதகபாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ. செக்காரப்பட்டி கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் மற்றும் மன்னார் ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் திருவிளக்கு, புனிதநீர் மற்றும் பிள்ளையார், திருமகள் மற்றும் நீலத்தேவர் வழிபாடுகள், ஐங்கரன் வேள்வி மற்றும் முதல் கால வேள்வி பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து விமான கலசங்கள் நிறுவுதல் மற்றும் 2-ம் கால வேள்வி பூஜையும், ஏரிகோடி விநாயகர் கோவிலில் இருந்து புனிதநீர் குடங்கள் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் 3-ம் கால வேல்வி பூஜை மற்றும் பேரொளி வழிபாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை நான்காம் கால வேள்வி பூஜையும், தொடர்ந்து யாக சாலையிலிருந்து புனிதநீர் குடங்கள் புறப்பாடும் நடந்தது. பின்னர் சிவத்திரு ஒளியரசு அய்யா முன்னிலையில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து பச்சையம்மன், மன்னார் ஈஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்