தொ.மு.ச. கொடியேற்று விழா

பொம்மிடியில் தொ.மு.ச. கொடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2022-06-21 18:50 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, கட்சி கொடியேற்று விழா, தொ.மு. சங்க பெயர் பலகை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பொம்மிடியில் நடைபெற்றது. பணிமனை தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். செயலாளர் மாது வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி கொடி ஏற்றி, பெயர் பலகை திறந்து வைத்து, இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொ.மு.ச. பொது செயலாளர் கிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சித்தார்த்தன், தனபால், பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன், பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ், பொம்மிடி கவுதமன், சங்க நிர்வாகிகள் சின்னசாமி, சேகர், பரமசிவம், வாசு, தினகரன், அன்பரசு, சின்னஅழகு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணிமனை பொருளாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்