திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனை
திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
இந்த சோதனையில் ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக 55 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 60 விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.