காவிரியில் போதிய அளவு தண்ணீரை திறந்து விடுமாறு, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
காவிரியில் போதிய அளவு தண்ணீரை திறந்து விடுமாறு, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை என்பதால், தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியிருக்கிறார்.
கர்நாடக அணைகளில் 92 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று சித்தராமையா கூறுவது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல்.காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க ஆணையிட வேண்டும்;தமிழ்நாட்டில் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற காவிரியில் போதிய அளவு தண்ணீரை திறந்து விடுமாறு, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.