மத்திய அரசு ஓய்வூதியர் சங்க ஆண்டு விழா
தூத்துக்குடியில் மத்திய அரசு ஓய்வூதியர் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.;
தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர் சங்கத்தின் 24-வது ஆண்டு விழா தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு உதவி தலைவர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் பிச்சையா ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வீரபத்திரன் வரவு செலவு கணக்கை வாசித்தார். விழாவில் சங்க புதிய தலைவராக பிச்சையா, கவுரவ தலைவராக சீனிவாச தாத்தம், செயலாளராக உதயகுமாரன், பொருளாளராக கிட்டு என்ற வீரபத்திரன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் ஓய்வு பெற்றபின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராஜன் நன்றி கூறினார்.