ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-08-12 19:10 GMT

வெள்ளியணை பகுதியில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், பண்ணை குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள், விவசாய நிலங்களில் வரப்பு அமைத்தல், மழை வளத்தை அதிகரிக்கும் பொருட்டு மரம் வளர்ப்பு பணிகள் என பல்வேறு பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்ட குழுவின் துணை செயலாளர் பிரதீப் மற்றும் தொழில் நுட்ப அலுவலர் (நீர் மேலாண்மை) ஜோதி பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மணவாடி, மூக்கணாங்குறிச்சி ஊராட்சிகளில் மரம் வளர்ப்பு பணிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் நர்சரி கார்டன் களையும், வெள்ளியணை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பள்ளசங்கனூரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்த அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த தடுப்பணையால் பயன் உண்டா? என்று கேட்டனர். இந்த ஆய்வின்போது மாவட்ட திட்ட அலுவலர் மந்திராச்சலம், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.கடவூர் ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்