இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை - அண்ணாமலை பேட்டி

இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்னாமலை கூறினார்.

Update: 2022-10-13 04:40 GMT

சென்னை,

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் எதிர்ப்புக்குரலை பதிவு செய்தார். தமிழகத்தை தொடர்ந்து கேரளா, தெலுங்கானா மாநிலங்களும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்பினார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை. இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால், தமிழக பாஜக எதிர்க்கும். யார் இந்து, யார் இந்து இல்லை என்று கண்டுபிடிப்பது தான் தற்போது ஃபேஷன் ஆக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. காங்கிரஸ் இந்தி மொழியை திணித்த போது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. மத்திய அரசு 3 மொழியை படிக்க வேண்டும் வேண்டும் என சொல்லி வருகின்றது. இந்தி கற்பதில் தமிழகம் "சி" நிலையில் உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தூங்கவிடுங்க என திமுகவினருக்கு வேண்டுகோள் வைக்கின்றேன் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்