நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்...?
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
நெல் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்த நிலையில் 19 சதவீதம் வரை நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இதில் தற்போது 19 சதவீதம் வரை ஈரப்பத நெல் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இம்மாதம் நல்ல மழை பெய்ய தொடங்கி இருப்பது காரணமாக நெல்லின் ஈரப்பதம் அளவை அதிகரித்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தான் 22 சதவீதம் வரை ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலையில், 19 சதவீதம் வரை நெல் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.