எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு..!

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2023-05-16 04:47 GMT

சேலம்,

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பாத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி மனுவில் உண்மை தன்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வேட்புமனுவில் பொய்யான தகவலை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளது. புகார்தாரர் தேனியைச் சேர்ந்த மிலானி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பழனிசாமி ஆகியோருக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்