மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலய நூற்றாண்டு தொடக்க விழா ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
மத்திகிரி
ஓசூர் அருகே மத்திகிரி குதிரைபாளையத்தில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலய நூற்றாண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கி, ஆடம்பர திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரையுடன் விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவில், மத்திகிரி ஆலய பங்கு தந்தை கிறிஸ்டோபர், தர்மபுரி மறை மாவட்ட ஓசூர் வட்டார தலைமை குரு பெரியநாயகம், அருட்தந்தை ராயப்பர், அருட்சகோதரிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.