கல்லறை தினம் கடைபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லறை தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-11-02 19:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லறை தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கல்லறை தினம்

உலகம் முழுவதும் நவம்பர் 2-ந் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறை தினமாகவும், சகல ஆத்மாக்களின் தினமாகவும் அனுசரித்து வருகின்றனர். அதன்படி, கல்லறை தினமான நேற்று கிருஷ்ணகிரியில் கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் உறவினர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தினர். பின்னர் பல்வேறு மலர்களால் கல்லறைகளை அலங்கரித்தனர். பின்னர் ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி குடும்பத்துடன் பிரார்த்தனை செய்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள கல்லறையில், தூய பாத்திமா ஆலய பங்கு தந்தை இசையாஸ் தலைமையில் பாதிரியார்கள், இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில், 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

இதே போலஎலத்தகிரி, கந்திகுப்பம், புஷ்பகிரி, பர்கூர், சூளகிரி, ஓசூர், மதகொண்டப்பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்