மணலி விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி மீது சிமெண்ட் கலவை லாரி மோதி விபத்து - டிரைவர் படுகாயம்

மணலி விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி மீது சிமெண்ட் கலவை லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார்.

Update: 2022-06-01 08:05 GMT

சென்னை மாதவரத்தில் இருந்து சிமெண்ட் கலவை கலக்கும் லாரி ஒன்று திருவொற்றியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் அதிவேகமாக ஓட்டி சென்ற நிலையில், சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அருகில் சென்ற போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியதில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி சென்ற டிரைவர் சீத்தாராமன் (வயது 24) படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாத்தாங்காடு போலீசார் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த டிரைவரை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருவொற்றியூர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால், அந்த பணிக்காக 8 டன் சிமெண்ட் கலவை கலந்து எடுத்து கொண்டு அதிவேகமாக லாரி சென்ற போது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனால் மணலி விரைவு சாலையில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்