கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் செல்போன்கள் திருட்டு - போலீசார் விசாரணை

கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் செல்போன்கள், ரொக்கப்பணம் திருட்டு திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-12-07 09:12 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தச்சூரில் வல்லூரைச்சேர்ந்த அக்பர் (வயது 21) என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அவர் அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 செல் போன்கள், 6 ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் கல்லாவில் இருந்த ரொக்கப்பணம் ரூ.29 ஆயிரம் ஆகியவற்றை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அக்பர் கவரைப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

இதில் முககவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்