உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-11 16:20 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் அன்பழகன்(வயது 25). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றபோது, அன்பழகனுக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் இருந்த குழாயில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் விஜயகுமார்(19), அன்பழகனை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்