மருந்துக்கடை உரிமையாளர் உள்பட 2 பேரிடம் செல்போன் பறிப்பு

மருந்துக்கடை உரிமையாளர் உள்பட 2 பேரிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-07-04 19:42 GMT

நெல்லை டக்கரம்மாள்புரம் அசோக்நகர் 'ஏ' காலனியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 50). மானூரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் தருவதாக கூறி அவரை அழைத்து சென்றார். சிறிது தூரத்தில் ஒரு காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த நபர், ரமேஷ்பாபுவை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டு, கைகெடிகாரம் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார்.

அதேபோல் மேலக்கருங்குளம் பீடிகாலனியை சேர்ந்த மகாராஜா என்பவர் அம்பை ரோட்டில் நடந்து சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்