கோவில்களில் செல்போன்களுக்கு தடை
கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பொதுமக்கள் குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்?;
பொதுவாக அமைதி வேண்டியும், நேர்த்திக்கடன் செலுத்தவும் கோவில்களுக்கு செல்கிறோம். மாதக்கணக்கில், ஆண்டு கணக்கில் வேண்டிக்கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களும் உண்டு. அத்தகைய பயபக்தி கொண்டவர்களை இடையூறு செய்யும் வகையில் யாருடைய செயல்பாடும் இருக்க கூடாது. அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை ஆனதாண்டபுரம் முருகவேல் தெரிவித்துள்ளார்