மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் செல்போன்

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் செல்போன் கலெக்டர் வழங்கினார்;

Update:2022-12-26 00:15 IST
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் செல்போன்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல்வரின் முகவரித்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு வார விழாவுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட காது கேளாத, வாய் பேசாத மற்றும் பார்வையற்ற கல்வி பயிலும், பணி செய்யும், சுயதொழில் செய்யும் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள பிரத்யேக செயலியுடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்