புஞ்சைபுளியம்பட்டியில் பெண்ணிடம் செல்போன்- பணம் அபேஸ்
புஞ்சைபுளியம்பட்டியில் பெண்ணிடம் செல்போன்- பணம் அபேஸ் செய்யப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கோப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மனைவி கல்பனா (வயது 42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை கோவை செல்வதற்காக புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஏறினார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கல்பனாவின் கைப்பையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.15 ஆயிரம், வங்கி ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை மர்ம நபர்கள் அபேஸ் செய்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.