தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி பெரியார் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). கோவில் அர்ச்சகரான இவர் நேற்று தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டு ஆறுமுகம் செல்போனில் ஒருவரிடம் பேசினார். பின்னர் அந்த செல்போனை அங்கேயே வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்துபோது செல்போன காணவில்லை. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மர்மநபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தார். அப்போது அவர் ஆறுமுகத்தின் செல்போனை திருடியது தெரிந்தது. இதையடுத்து பிடிபட்ட மர்மநபரை தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் ஒப்படைத்தாா். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர், கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் கிராமத்தை சேர்ந்த சிவராமன் மகன் ராஜேஷ்(39) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.