கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து செல்போன் திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து செல்போன்களை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.;

Update: 2023-08-21 11:09 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பழவேற்காடு தெருவில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 4 பேர் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில், உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கு இருந்த விலை உயர்ந்த 4 செல்போன்களை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியார் தொழிற்சாலை ஊழியர் சசிகுமார் (வயது23) என்பவர் அளித்த புகாரின் பேரில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்