மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த பணம், செல்போன் திருட்டு

கம்பைநல்லூர் அருகே மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த பணம், செல்போன் திருடிய 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-09-07 16:41 GMT

மொரப்பூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 21). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது உறவினர் மாதுவுடன் மோட்டார் சைக்கிளில் கம்பைநல்லூர் அருகே இருமத்தூருக்கு சென்றார். பின்னர் அங்குள்ள அம்பேத்கர் நகர் பெருமாள் ஏரிக்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மோட்டார் சைக்கிள் சீட் கவரில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 700 மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிச்சென்றனர். இது குறித்து சூர்யா கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பணம், செல்போனை திருடியவர்கள் அரசம்பட்டி சந்தப்பேட்டையை சேர்ந்த தனுஷ் என்கிற முனியப்பன் (20), நரேன் (24) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்