லாரி செட்டில் செல்போன் திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடி லாரி செட்டில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கோவில்பட்டி கே.கே.நகரை சேர்ந்தவர் கோவில்பிள்ளை (வயது 45). இவர் தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு லாரி செட்டில் புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். இவர் லாரி செட்டில் செல்போனை சார்ஜ் செய்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த சபர் முகமது (21), வினோத் என்ற வினோத்குமார் (20) ஆகிய 2 பேரும் அந்த செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, சபர்முகமது, வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.