பால் வியாபாரியிடம் செல்போன் பறிப்பு

சேலத்தில் பால் வியாபாரியிடம் செல்போன் பறித்து சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-02 20:05 GMT

சேலம் அம்மாப்பேட்டை டி.எம்.எஸ். செட் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் தினகரன் (வயது 22). பால் வியாபாரி. இவர், நேற்று அதிகாலை கிச்சிப்பாளையம் சோழிய வேளாளர் தெருவில் பால் சப்ளை செய்ய வந்துள்ளார். அப்போது, அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் தினகரனை வழிமறித்து அவரிடம் இருந்து ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி அவர் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வியாபாரியிடம் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்